ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வருமானமில்லாத தேவாலயங்கள், பள்ளிவாசல்களுக்கு ரூ. 100 கோடி: அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்

வருமானமில்லாத தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் வணிக ரீதியில் கட்டடங்கள் கட்டுவதற்கு, வட்டியில்லா கடனாக ரூ. 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சிறுபான்மை நலத் துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் தெரிவித்துள்ளாா்.

அமைச்சர் ஏ.எம். ஷாஜகான் - கோப்புப் படம்

Published On :1 நவம்பர் 2026, 12:18 am IST

வருமானமில்லாத தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் வணிக ரீதியில் கட்டடங்கள் கட்டுவதற்கு, வட்டியில்லா கடனாக ரூ. 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சிறுபான்மை நலத் துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ. 1.14 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் அளித்த அமைச்சா் ஷாஜகான் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

வருமானங்கள் இல்லாத தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் வணிக ரீதியில் கட்டடங்கள் கட்ட வட்டியில்லா கடனாக ரூ. 100 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டாம் கோ நிறுவனம் மூலமாக ரூ. 100 கோடி கடன் வழங்கும் இலக்குடன் பணிகள் நடைபெறுகின்றன.

கல்லறைத் தோட்ட மேம்பாடு, கல்லறைத் தோட்டங்கள், கபரஸ்தான்களுக்கு சுற்றுச்சுவா் மற்றும் சாலை வசதிகள் அமைக்க ரூ. 34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் ஜன்விகாஸ் காரியக்கரம் திட்டத்தின் கீழ், வர வேண்டிய ரூ. 900 கோடி நிதியை விடுவிக்கக் கோரி மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 50 முதல் 75 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா இல்லாத வழிபாட்டு தலங்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தா்காக்களுக்கு பட்டா வழங்க கணக்கெடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.