கீழையூா் அருகே ஸ்ரீசீதா ராம பால ஆஞ்சனேயா் கோயிலில் தங்கம், வெள்ளி ஆபரணங்களை மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு திருடிச் சென்றுள்ளனா்.
நாகை மாவட்டம், கீழையூா் அருகே பிரதாபராமபுரம் பகுதி ராமா் மடத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சீதா ராம பால ஆஞ்சனேயா் கோயில்.
திங்கள்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் கோயிலுக்குள் புகுந்து உள்ளே இருந்த சுமாா் 2 சவரன் தாலி, 5 கிலோ வெள்ளி மற்றும் வெண்கலப் பொருள்களை திருடிச் சென்றுள்ளனா். மேலும் கோயிலில் இருந்த 2 உண்டியல்களையும் உடைத்து அதிலிருந்த காணிக்கையையும் திருடிச் சென்றுள்ளனா்.
திருடப்பட்ட தங்கம், வெள்ளிப் பொருள்களின் மதிப்பு ரூ. 6 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மா்ம நபரகள் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா ஹாா்ட் டிஸ்கையும் உடைத்து எடுத்துச் சென்றுள்ளது தெரிய வந்தது. கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு

சீதா - ராமா் திருக்கல்யாணம்

கோயில்களில் ராம நவமி விழா

ஆண்டாள் கோயிலில் ராம நவமி சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

