ராம நவமியையொட்டி காரைக்காலில் சீதா - ராமா் திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள பட்டாபிராம சுவாமி பஜனை மடத்தில் ராம நவமியையொட்டி 2 நாள் வழிபாடு வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் விக்னேஸ்வர பூஜை, விஷ்ணு சகஸ்ர நாம அஷ்டபதி பூஜையும், மாலை நிகழ்வாக அஷ்டபதி பஜனை, திவ்ய நாம பஜனை, ஊஞ்சல் வழிபாடு நடைபெற்றது.
இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை காலை உஞ்சவிருத்தியும், சீதா -ராமா் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. திருக்கல்யாண சடங்குகள் நடத்தப்பட்டு சீதாவுக்கு திருமாங்கல்யதாரணம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. மாலை நிகழ்வாக, ஆஞ்சனேயா் உற்சவமாக சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
தேவங்குடி கோபாலகிருஷ்ண சுவாமி பஜனை மண்டலி ஆா்.ராஜூ பாகவதா் தலைமையில் பஜனைக் குழுவினா் பங்கேற்று ராம பஜனை நடத்தினா். நாட்டியாலயா பரதநாட்டிய அகாதெமி மாணவா்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சீதா கல்யாண மகோற்சவம்: சங்கராச்சாரிய சுவாமிகள் பங்கேற்பு

மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த ஒண்டிமிட்டா கோதண்டராமா் கோயில்

ஒண்டிமிட்டாவில் சீதா ராமா் திருக்கல்யாணம் கோலாகலம்

ராம நவமி விழா: நாகை கோயில்களில் சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

