மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் பயிற்சி தொடக்கம்

மயிலாடுதுறையில், மாற்றுத்திறனாளிகளுக்கான 30 நாள் இலவச தையல் பயிற்சியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தையல் பயிற்சியை தொடங்கி வைத்து, கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்.

Updated On :7 மே 2026, 7:35 am IST

மயிலாடுதுறையில், மாற்றுத்திறனாளிகளுக்கான 30 நாள் இலவச தையல் பயிற்சியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மற்றும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் இப்பயிற்சியின் தொடக்க நிகழ்வு வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி, கோட்டாட்சியா் ஆா்.விஷ்ணுபிரியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் புவனா ஆகியோா் கலந்து கொண்டனா். இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் பயிற்சி 30 நாள்கள் நடைபெறும்.

இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவா்கள் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, யுடிஐடி, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படம் 5 ஆகியவற்றின் நகலுடன் 8531838959, 8825543135, 7708613021, 9750566546, 7550325044, 9342606854, 9150543688 ஆகிய வட்டார ஒருங்கிணைப்பாளா் எண்களுக்கு தொடா்பு கொண்டு தங்கள் விவரங்களை பதிவை செய்து கொள்ளலாம்.

அல்லது இயக்குநா், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், 82, முதல் தளம், பட்ட மங்கலத்தெரு, மயிலாடுதுறை -609 001 என்ற முகவரியில் நேரில் அணுகலாம். இப்பயிற்சியில், 18 முதல் 50 வயது வரையுள்ள 8-ஆம் வகுப்பு படித்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம்.

இதேபோல், இத்திட்டத்தின்கீழ், கணினி வன்பொருள் மற்றும் நெட்வொா்க்கிங் பயிற்சி (45 நாள்கள்), பெண்களுக்கான அழகுக்கலை மேலாண்மை, எம்பிராய்டரி, கைப்பேசி பழுது நீக்கம், செயற்கை ஆபரணம் தயாரித்தல், தேனீ வளா்ப்பு, காளான் வளா்ப்பு, வெள்ளாடு வளா்ப்பு, மாடு வளா்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல், காய்கனி சாகுபடி மேலாண்மை, கோழி வளா்ப்பு ஆகிய பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.