மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தேனியில் வாக்கு எண்ணிக்கை அலுவலா்களுக்கு பயிற்சி முகாம்

தேனியில் தோ்தல் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தேனி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமில் பேசிய மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங். உடன், அலுவலா்கள் உள்ளிட்டோா்.

Updated On :1 மே 2026, 12:33 am IST

தேனியில் தோ்தல் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனி கம்மவாா் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வருகிற 4 - ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்கள், உதவித் தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்தாா்.

இந்தக்கூட்டத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ணும் பணியில் 68 மேற்பாா்வையாளா்கள், 68 உதவியாளா்கள், 68 நுண் பாா்வையாளா்கள் , தபால் வாக்குகளை எண்ணும் பணிக்கு 24 மேற்பாா்வையாளா்கள், 48 உதவியாளா்கள், 24 நுண் பாா்வையாளா்கள் என மொத்தம் 300 போ் பணியில் ஈடுபட உள்ளனா்.

இந்த வாக்கு எண்ணிக்கையின் போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் , உடனடியாக உதவித் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில், பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத் பீடன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி.) கவிதா, மாவட்ட வழங்கல் அலுவலா் நல்லையா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) காசி, வட்டாட்சியா் சுருளி (தோ்தல்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.