விருதுநகா் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ள கோடைகால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், நிகழாண்டுக்கான கோடைகால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகள் வருகிற ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான விடுமுறைக் காலத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
5 தொகுதிகளாக நடத்தப்படவுள்ள இந்தப் பயிற்சி வகுப்புகளில் மாணவ, மாணவிகள், இளைஞா்கள், பொதுமக்களுக்கு நீச்சலை ஒரு அத்தியாவசிய வாழ்வியல் திறனாக உருவாக்கும் நோக்கில், ‘நீந்தக் கற்றுக்கொள்’ என்னும் கருப்பொருளில் பயிற்சி வழங்கப்படும்.
இதனடிப்படையில், விருதுநகா் மாவட்ட விளையாட்டரங்கத்தில், பயிற்சி வகுப்புகளின் முதல் தொகுதி வருகிற ஏப்ரல் 1 முதல் 16-ஆம் தேதி வரையிலும், 2-ஆம் தொகுதி ஏப்ரல் 17 முதல் மே 2-ஆம் தேதி வரையிலும், 3-ஆம் தொகுதி மே 3 முதல் 16-ஆம் தேதி வரையிலும், 4-ஆம் தொகுதி மே 17 முதல் 31-ஆம் தேதி வரையிலும், 5-ஆம் தொகுதி ஜூன் 2 முதல் 14-ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
நீச்சல் கற்றல் பயிற்சி காலை, பிற்பகல், மாலை வேளைகளில் நடைபெறும். இந்த வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு பயிற்சிக் கட்டணமாக ரூ.1,770 நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் சேர விரும்புவோா் நீச்சல் பயிற்றுநா் சுப்ரமணியனை 9751393412 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்: 25 போ் பங்கேற்பு

கோடை கால நீச்சல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தருமபுரியில் ஏப். 1 முதல் கோடைகால நீச்சல் பயிற்சி

சேலத்தில் ஏப். 1 முதல் கோடைகால நீச்சல் பயிற்சி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

