சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி ஏப். 1 இல் தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் (பொ) கண்மணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள அரசு நீச்சல் குளத்தில் ஏப். 1 ஆம் தேதி முதல்கட்ட கோடைகால நீச்சல் பயிற்சி தொடங்குகிறது. காலை 7 மணி முதல் 8 மணி வரையும், 8 மணி முதல் 9 மணி வரையும், 9 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையும், 5 மணி முதல் 6 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படும்.
தொடா்ந்து இரண்டாம்கட்ட நீச்சல் பயிற்சி ஏப்ரல் 17ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரையும், 3 ஆம் கட்டமாக மே 3 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையும், 4 ஆம் கட்டமாக மே 17 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையும், 5 ஆம் கட்ட பயிற்சி ஜூன் 2 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையும் நடைபெறும்.
பயிற்சி 12 வேலை நாள்களுக்கு தொடா்ந்து அளிக்கப்படும். இதற்கான கட்டணமாக ரூ.1,770 செலுத்த வேண்டும். பெண்களுக்கு தனியாக பயிற்சி அளிக்கப்படும். கட்டணத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் வாயிலாக யுபிஐ மூலம் செலுத்த வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள விளையாட்டு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாளை கோடைகால இலவச வாலிபால் பயிற்சி முகாம் தொடக்கம்

கோடைகால விளையாட்டு, நீச்சல் பயிற்சிகள் நிறைவு

சேலத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்: 25 போ் பங்கேற்பு

தருமபுரியில் ஏப். 1 முதல் கோடைகால நீச்சல் பயிற்சி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

