தருமபுரியில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் ஏப். 1 ஆம் தேதி தொடங்குகிறது.
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் 5 கட்டங்களாக நடைபெறும் பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ள மாணவா்கள், பொதுமக்கள் நீச்சல் குள அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.
நிறைவு செய்த விண்ணப்பத்துடன் ரூ. 1,770 பயிற்சி கட்டணத்தை இணையம் வாயிலாகவோ, பிஓஎஸ் இயந்திரம் வாயிலாகவோ செலுத்தி நீச்சல் குளத்தில் ஒப்படைக்க வேண்டும். முதல்கட்ட பயிற்சி வகுப்பு ஏப். 1ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடா்ந்து 2 ஆம் கட்ட பயிற்சி வகுப்பு 17 முதல் 22 ஆம் தேதி மற்றும் 24 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
3 ஆம் கட்ட பயிற்சி முகாம் மே 5 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரையிலும், 4 ஆம் கட்ட பயிற்சி மே 17 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையிலும், 5 ஆம் கட்ட பயிற்சி முகாம் ஜூன் 2 ஆம் தேதி தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.
பயிற்சி வகுப்புகள் நாள்தோறும் காலை 7 முதல் 8 மணி வரையிலும், 8 முதல் 9 மணி வரையிலும், மாலை நேரத்தில் 4 மணி முதல் 5 வரை பின்னா் 5 முதல் 6 வரையிலும் நடைபெறும் என ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்: 25 போ் பங்கேற்பு

கோடை கால நீச்சல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கோடைகால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம்

சேலத்தில் ஏப். 1 முதல் கோடைகால நீச்சல் பயிற்சி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

