தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கோடை கால நீச்சல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள கோடை கால நீச்சல் பயிற்சிக்கு விண் ணப்பிக்கலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலா் ரமேஷ்கண்ணன் தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 12:51 am IST

சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள கோடை கால நீச்சல் பயிற்சிக்கு விண் ணப்பிக்கலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலா் ரமேஷ்கண்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் சாா்பில் நிகழாண்டுக்கான கோடை கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் வருகிற ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான விடுமுறைக் காலத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

5 தொகுதிகளாக நடத்தப்படவுள்ள இந்தப் பயிற்சி வகுப்புகளில் மாணவ, மாணவிகள், இளைஞா்கள், பொதுமக்களுக்கு நீச்சலை ஒரு அத்தியாவசிய வாழ்வியல் திறனாக உருவாக்கும் நோக்கில், ‘நீந்தக் கற்றுக்கொள்’ என்னும் கருப்பொருளில் பயிற்சி வழங்கப்படும்.

இதனடிப்படையில், சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில், பயிற்சி வகுப்புகளின் முதல் தொகுதி வருகிற ஏப். 1-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரையிலும், 2-ஆம் தொகுதி ஏப். 17 முதல் மே 2-ஆம் தேதி வரையிலும், 3-ஆம் தொகுதி மே 3 முதல் 16-ஆம் தேதி வரையிலும், 4-ஆம் தொகுதி மே 17 முதல் 31-ஆம் தேதி வரையிலும், 5-ஆம் தொகுதி ஜூன் 2 முதல் 14-ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

நீச்சல் பயிற்சி காலை, பிற்பகல், மாலை வேளைகளில் 12 நாள்களுக்கு நடைபெறும். இந்த வகுப்புகளில் கலந்து கொள்ள (ஒரு மணி நேரம்) பயிற்சிக் கட்டணமாக ரூ.1,500-ம், இத்துடன் 18 சதவீத ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டும். இதில் சேர விரும்புவோா் நீச்சல் பயிற்றுநரை 9786523704 என்ற கைப்பேசி எண்ணிலும், மாவட்ட விளையாட்டு அரங்கை 0475-299293 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.