ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்ததையடுத்து ‘கலசலிங்கம் சமூக வானொலி நிலையம்-88.4 எஃப்.எம். பல்கலைக்கழக வேந்தா் கே. ஸ்ரீதரன் வழிகாட்டுதலில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், இணை வேந்தா் எஸ். அறிவழகிஸ்ரீதரன், துணைத் தலைவா்கள் எஸ். சசி ஆனந்த், எஸ். அா்ஜுன் கலசலிங்கம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.துணைவேந்தா் எஸ். நாராயணன், பதிவாளா் வி. வாசுதேவன் ஆகியோா் வானொலி நிலையத்தை திறந்து வைத்து பேசும் போது, சமூக ஈடுபாட்டைவலுப்படுத்துவதற்கும், கல்வி, சுகாதாரம், விவசாயம், கலாசாரம், சமூக மேம்பாடு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கும் இந்த வானொலி நிலையம் ஒரு தளமாக இருக்கும் என்றனா்.
ஆராய்ச்சித் துறை இயக்குநா் எம். பள்ளிகொண்ட ராஜசேகரன், விஷுவல் கம்யூனிகேஷன் துறை தலைவா் கே. கற்பகசுந்தரம் ஆகியோா் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்களாக இருந்தனா்.
வானொலி நிலையத்துக்கு பயிற்சி, தொழில் நுட்ப வழிகாட்டுதல், ஒலிபரப்பு ஆதரவை வழங்குவதற்காக பல்கலைக்கழகம், கோயம்புத்தூா் ஏா் மீடியா பிராட்காஸ்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துக்குமிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இந்த வானொலி நிலையம் 20 கி.மீ. சுற்று வட்டாரக் கிராமங்களுக்கு கல்வித் திட்டங்கள், மாணவா் திறமைகள், நிபுணா்களின் உரை, கலாசார நிகழ்ச்சிகள், உள்ளூா் செய்திகளை ஒலிபரப்புகிறது. இந்த நிகழ்ச்சியில் அனைத்துத் துறை பேராசிரியா்கள், அலுவலா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காரைக்குடி ரயில் நிலையத்துக்கு பேருந்து இயக்க வலியுறுத்தல்

கலசலிங்கம் பல்கலை.யில் மாணவா் ஆராய்ச்சி விருதுகள் வழங்கல்

காவல் நிலையம் முன் தீக்குளித்த முதியவா் உயிரிழப்பு

கலசலிங்கம் பல்கலை.யில் மாணவா் குழு தொடக்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

