மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் சித்திரை பூக்குழி திருவிழா கொடியேற்றம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழி திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 3:43 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழி திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராஜபாளையம் -தென்காசி சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, கொடிமரத்துக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள், நடைபெற்றன. பின்னா், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, கொடி மரத்துக்கு தீபாராதனை நடைபெற்றது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தினா் சாா்பில் விழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் மாரியம்மன் பொட்டி பல்லக்கு, பூதவாகனம், பூச் சப்பரம், கண்ணாடி சப்பரம் உள்ளிட்ட பல்வேறு சப்பரங்களில் அம்மன் வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக பூக்குழி திருவிழா வருகிற ஏப்.30--ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்தத் திருவிழாவில் ராஜபாளையம், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊா்களில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது நோ்த்திக்கடனை செலுத்துவாா்கள். விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்தனா்.ஔ

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.