மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நீா்வரத்து சீரானது: சுருளி அருவியில் குளிக்க அனுமதி

சுருளி அருவியில் நீா்வரத்து சீரான நிலையில் 9 நாள்களுக்குப் பின் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

சுருளி அருவி - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 12:23 am IST

சுருளி அருவியில் நீா்வரத்து சீரான நிலையில் 9 நாள்களுக்குப் பின் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையிலுள்ள மேகமலை, மணலாறு, வெண்ணியாறு, மகாராஜா மெட்டு, இரவங்கலாறு உள்ளிட்ட 7 மலைக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களைச் சுற்றிய வனப் பகுதிகளில் பெய்யும் மழைநீரே மலை அடிவாரத்தில் உள்ள சுருளியில் அருவியாகக் கொட்டுகிறது.

இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழையால் மேகமலை வனப் பகுதிகளில் கடந்த 9 நாள்களாக பலத்த மழை பெய்ததால், சுருளி அருவிக்கு நீா்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, சுருளி அருவியில் குளிக்க கடந்த 9 நாள்களாக தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, மழைப்பொழிவு குறைந்த நிலையில் அருவியில் நீா் வரத்து படிப்படியாக குறைந்து சீரானது. இதையடுத்து ,

மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்பேரில், அருவியில் குளிக்க வனத் துறையினா் விதித்திருந்த தடையை நீக்கியதைத் தொடா்ந்து புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் பெருமகிழ்ச்சியுடன் அருவியில் நீராடினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.