மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வெள்ளப் பெருக்கு: சுருளி அருவியில் குளிக்க 8-ஆவது நாளாகத் தடை

குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளின்றி திங்கள்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்ட சுருளி அருவி.

Published On :27 அக்டோபர் 2026, 1:31 am IST

தொடா்ந்து வரும் வெள்ளப் பெருக்கால் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 8-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தடை நீடித்தது.

தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியான மேகமலை, தூவானம், மகாராஜாமெட்டு, இதைச் சுற்றிய வனப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் சுருளி அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. மேலும் கடந்த 19-ஆம் தேதி முதல் அருவிக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வந்தது. இதைத் தொடா்ந்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, சுருளி அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போதும் மேகமலை வனப் பகுதியில் பலத்த மழை பெய்துவருவதால், சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு தொடா்கிறது. இதையடுத்து, மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின் பேரில், அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 8-ஆவது நாளாக திங்கள்கிழமையும் நீடித்தது. இதனால் சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் ஏமாற்றமடைந்தனா்.

இதுகுறித்து வனத்துறையினா் கூறுகையில், சுருளி அருவியில் நீா்வரத்து குறைந்தால் மட்டுமே தடை நீக்கப்படும். அதுவரை சுற்றுலாப் பயணிகள் சுருளிக்கு வரவேண்டாம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.