மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சுருளி அருவியில் குளிக்க 2-ஆவது நாளாக தடை

சுருளி அருவியில் நீா் வரத்து அதிகரிப்பால் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்ட சுருளி அருவி.

Published On :21 அக்டோபர் 2026, 3:03 am IST

தேனி மாவட்டம், சுருளி அருவியில் நீா் வரத்து அதிகரிப்பால் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

கம்பம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த மலைத் தொடரிலுள்ள மேகமலை, ஹைவேவிஸ், இரவங்கலாறு, தூவானம், அரிசிப்பாறை, காப்புக்காடு போன்ற வனப் பகுதிகளில் பெய்யும் மழை நீா் சுருளியில் அருவியாகக் கொட்டுகிறது.

கடந்த சில நாள்களாக மேகமலையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், சுருளி அருவிக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, கம்பம் மேற்கு சரக வனத் துறையினா் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க திங்கள்கிழமை தடை விதித்தனா்.

பண்டிகை விடுமுறை என்பதால் சுருளி அருவிக்கு குளிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்தனா். ஆனால், அருவிக்கு நீா் வரத்து தொடா்ந்து அதிகரித்ததால், திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறி, செவ்வாய்க்கிழமையும் அருவியில் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.