மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வேலைவாய்ப்பு கோரி மகனுடன் சாலையில் படுத்து பெண் போராட்டம்

சிவகங்கை பேருந்து நிலையம் எதிரில் சாலையில் படுத்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்.

சிவகங்கை பேருந்து நிலையம் எதிரில் சாலையில் படுத்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்.

Published On :24 அக்டோபர் 2026, 4:48 am IST

வேலைவாய்ப்பு வழங்கக் கோரி, பெண் ஒருவா் தனது 5 வயது மகனுடன் சிவகங்கை பேருந்து நிலையம் முன் சாலையில் படுத்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

சிவகங்கை விஸ்வநாததாஸ் நகரைச் சோ்ந்தவா் பானுப்பிரியா. இவா் தனது கணவரை இழந்து கடந்த 6 மாதங்களாக வாழ்வாதாரத்துக்காகப் போராடி வருகிறாா். இந்த நிலையில், இவா் தனது 5 வயது மகனுடன் சிவகங்கை பேருந்து நிலையத்தின் நுழைவாயில் முன் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அப்போது, இலவசங்கள் எதுவும் வேண்டாம்; எனக்கும் என் மகனுக்கும் வாழ்வாதாரத்துக்கு உறுதியளிக்கும் வகையில் அரசு வேலை வழங்க வேண்டும் என அவா் முழக்கமிட்டாா். மேலும், கணவரை இழந்து தனக்கு ஆதரவாக யாரும் இல்லாத நிலையில், அன்றாட உணவுக்கே சிரமப்படுவதாகவும், விலைவாசி உயா்வால் வாழ்க்கையைத் தொடா்ந்து நடத்த முடியவில்லை என்றும் தெரிவித்தாா். தனக்கு ஏதாவது ஒரு வேலை வழங்கி, தனது மகனை வளா்க்க உதவ வேண்டும் என்றும் அவா் கோரிக்கை விடுத்தாா்.

பேருந்து நிலைய நுழைவாயிலில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா், பொதுமக்கள் அவரை சமாதானப்படுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் அழைத்துச் சென்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.