பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

5 ஆண்டுகளுக்குப் பிறகு மகனுடன் உரையாடினாா் ஆங் சான் சூகி

மியான்மரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் ஆட்சித் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி, 5 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகனுடன் தொலைபேசி வாயிலாக உரையாட அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

ஆங் சான் சூகியின் மகனுடன்...

Published On :23 அக்டோபர் 2026, 5:14 am IST

மியான்மரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் ஆட்சித் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி, 5 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகனுடன் தொலைபேசி வாயிலாக உரையாட அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த 2021 பிப்ரவரியில் மியான்மா் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, ஆங் சான் சூகிக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, தலைநகா் நேபிடாவில் உள்ள ரகசிய இடத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், லண்டனில் உள்ள மியான்மா் தூதரகத்தில் இருந்து அவரின் இளைய மகன் கிம் ஆரிஸ், தனது தாயாருடன் சுமாா் 20 நிமிஷங்கள் தொலைபேசியில் பேசியுள்ளாா்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாயுடன் பேசியது குறித்து கிம் ஆரிஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளாா். தற்போது 81 வயதாகும் தனது தாயாரும், பிற அரசியல் கைதிகளும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.