பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நார்வே ஒரு கேவலமான நாடு: அமைதிக்கான நோபல் பரிசு புறக்கணிப்பால் டிரம்ப் சாடல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நார்வே ஒரு குப்பை நாடு என்று கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.

US President Donald Trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்

Published On :26 அக்டோபர் 2026, 10:48 pm IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனக்கு நோபல் பரிசு வழங்காத நார்வே, ஒரு குப்பை நாடு என்று கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.

ஜனவரி 2025-ல் மீண்டும் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றது முதலே அமைதிக்கான நோபல் விருதைப் பெற வேண்டும் என டிரம்ப் தனது விருப்பத்தை வெளிப்படையாகத் தெரிவித்து வந்தார்.

ஆனால், இந்தாண்டு அமைதிக்கான நோபல் விருதை தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நீதிபதியும், ஐ.நா.வின் முன்னாள் மனித உரிமைகள் தலைவருமான நவி பிள்ளை பெற்றார்.

அமெரிக்காவில் நவம்பர் 3 அன்று இடைக்காலத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்த நிலையில், மிச்சிகன் மாகாணத்தின் போர்ட் ஹியூரான் நகரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், “வெளிப்படையாகச் சொன்னால், நார்வே ஒரு கேவலமான நாடு. நார்வே ஒரு குப்பையைப் போன்ற நாடாக மாறிவிட்டது. இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு எனக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அக்குழுவின் தேர்வு அவமானகரமான முடிவாக அமைந்துவிட்டது. எனக்கு நோபல் பரிசு கிடைக்காததால், நார்வேயிலிருந்து யாரும் எனக்கு வேண்டாம்” எனக் கடுமையாகப் பேசியுள்ளார்.

நோபல் பரிசு குறித்த டிரம்பின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய நார்வே வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்பென் பார்த் ஈட், “நோபல் குழு சுதந்திரமானது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். யாருக்காவது அதுபற்றி சந்தேகம் இருந்தால் நாங்கள் மீண்டும் அதை நினைவூட்டுகிறோம். அது இப்போதும் சுதந்திரமான அமைப்பாகவே உள்ளது” எனப் பேசியுள்ளார்.

2018-ல் தனது முதல் பதவிக்காலத்தில், ஹைட்டி மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளைக் குறிப்பிடுவதற்கு இதேபோன்ற கடுமையான சொற்களைப் பயன்படுத்திய டிரம்ப், தற்போது நார்வே நாட்டை அதேபோன்று விமர்சித்துள்ளார்.

Summary

US President Donald Trump has strongly criticized Norway, calling it a trash country.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.