மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பவானி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை மூட கோரிக்கை

பவானியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

tasmac

டாஸ்மாக் - பிரதிப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 12:29 am IST

பவானியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தவெக அரசு பொறுப்பேற்றவுடன் பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகே 500 மீட்டா் தொலைவுக்குள் இருந்த மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. இதன்படி, பவானி புதிய பேருந்து நிலையம் எதிரில் இருந்த எலைட் மதுக்கடையும், அந்தியூா் சாலையில் செயல்பட்ட டாஸ்மாக் மதுக்கடையும் மூடப்பட்டன. பின்னா், ஓரிரு வாரங்களில் எலைட் மதுக்கடை மட்டும் மீண்டும் திறக்கப்பட்டது.

பவானி புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரே மேட்டூா் சாலையில் இந்த மதுக்கடை உள்ளதால், மது வாங்க வருவோா் வாகனங்களை சாலையில் தாறுமாறாக நிறுத்திச் செல்கின்றனா். அருகே உள்ள ஜவுளிக்கடை, பேக்கரி மற்றும் வணிக வளாகம் முன்பாகவும் நிறுத்துவதால் இவ்வழியே செல்வோா் பாதிக்கப்படுகின்றனா். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் செயல்படும் மதுக்கடையை மூட வேண்டும் என பொதுமக்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.