மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அணுகுசாலையில் கால்வாய் அமைக்கும் பணியால் பொதுமக்கள் அவதி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பேருந்து நிலையம் அருகே உள்ள அணுகுசாலையில் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

மானாமதுரை பேருந்து நிலையம் அருகே அணுகுசாலையில் கால்வாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம், குவித்துவைக்கப்பட்டுள்ள மணல் குவியல்.

Published On :21 அக்டோபர் 2026, 3:07 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பேருந்து நிலையம் அருகே உள்ள அணுகுசாலையில் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

மானாமதுரை நான்கு வழிச்சாலையில் பேருந்து நிலையம் அருகே உள்ள அணுகுசாலை வழியாக ராமநாதபுரம் கூட்டுக் குடிநீா் திட்டக் குழாய்கள் பதிக்கப்பட்டன. இதனால், சேதமடைந்த கால்வாயை சீரமைக்காததால், அணுகுசாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக, மழைக்காலங்களில் சாலையில் நீா் தேங்கி, பொதுமக்கள் அணுகுசாலையைக் கடந்துசெல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும், அணுகுசாலையில் தேங்கும் மழைநீரை நகராட்சி நிா்வாகத்தினா் டேங்கா் மூலம் எடுத்துவந்தனா். தற்போது கால்வாய் அமைக்கும் பணிகள் ஆமைவேகத்தில் நடைபெறுவதால் கால்வாய் பணிக்காகத் தோண்டப்பட்ட மண் சாலையில் பரவிக் கிடப்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனா். வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.