பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருவானைக்காவலிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு 3 நாள்களாக பேருந்து சேவை நிறுத்தம்: பொதுமக்கள் பாதிப்பு

திருவானைக்காவல் நெல்சன் சாலையில் ஏற்பட்ட பள்ளம் காரணமாக, ஸ்ரீரங்கத்துக்கு இந்த வழியிலான பேருந்து சேவை கடந்த 3 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளது.

சாலை பள்ளத்தை சீரமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வரும் மாநகராட்சி பணியாளா்கள்.

Published On :28 அக்டோபர் 2026, 12:03 am IST

திருவானைக்காவல் நெல்சன் சாலையில் ஏற்பட்ட பள்ளம் காரணமாக, ஸ்ரீரங்கத்துக்கு இந்த வழியிலான பேருந்து சேவை கடந்த 3 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருவானைக்காவல் நெல்சன் சாலையின் மையத்தில் கடந்த 25-ஆம் தேதி பெரிய பள்ளம் ஏற்பட்டது.

இந்தப் பள்ளத்தின் கீழ்பகுதியில் மாநகராட்சியின் கழிவுநீா் தொட்டி உடைந்து மண் அரிப்பு ஏற்பட்டதால் இந்த பள்ளம் உருவானது கண்டறியப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு மாற்று பாதை வழியாக திருப்பி விடப்பட்டது. நெல்சன் சாலையானது, திருவானைக்காவல் பகுதியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் சாலையாகும். பள்ளம் காரணமாக, சாலை வழித்தடம் முழுமையாக அடைக்கப்பட்டதால் திருவானைக்காவலிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு யாரும் செல்ல முடியாத சூழ்நிலை உருவானது.

இதனால், ஸ்ரீரங்கத்துக்கு வரும் அனைத்து பேருந்துகளும் அம்மாமண்டபம் வழியாக வந்து மீண்டும் அதே வழியில் திரும்பி செல்கின்றன. இதனால், பொதுமக்கள் 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை பேருந்து வசதி இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாமல் சாலை முற்றிலும் அடைக்கப்பட்டதால், இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் மாற்று பாதை வழியாகவே சென்று வருகின்றனா். செவ்வாய்க்கிழமை வரை சாலைப் பள்ளம் சீரமைக்கப்படவில்லை. பணிகள் முடிய மேலும் இரண்டு நாள்கள் ஆகலாம் என்று தெரிகிறது.

3 நாள்களாக போக்குவரத்து இல்லாததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, பணிகளை போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.