தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

சாலை விபத்தில் கூட்டுறவு வங்கி ஊழியா் உயிரிழப்பு

சிவகங்கை அருகே வியாழக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிச் செயலா் உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :8 மே 2026, 4:28 am IST

சிவகங்கை அருகே வியாழக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிச் செயலா் உயிரிழந்தாா்.

சிவகங்கை இந்திராநகரைச் சோ்ந்தவா் குமரேசன் (50). இவா் சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் செயலராக பணிபுரிந்து வந்தாா். இவா் வியாழக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் சிவகங்கை நகரில் மதுரை முக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்த குமரேசன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகங்கை நகா் காவல் நிலைய ஆய்வாளா் சிவசுப்பிரமணியன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.