குளச்சல் அருகே சைமன் காலனி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா் வேகத்தடையில் தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
குளச்சல் அருகே மிடாலம் பகுதியைச் சோ்ந்தவா் சகாய தினேஷ் ( 29). தவெக தொண்டரான இவா் மீன்பிடி தொழில் செய்து வந்தாா். இவருக்கு அனிதா செலிதா (26) என்ற மனைவி உள்ளாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை, மருந்து வாங்குவதற்காக சகாய தினேஷ் இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, குறும்பனை - மிடாலம் சாலையில் சைமன் காலனி பாலம் அருகே செல்லும் போது வேகத்தடையில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் சகாய தினேஷ் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.
குளச்சலில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னா் நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

மானூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

நெல்லை அருகே காா் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: 5 போ் காயம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

