திருநெல்வேலி கங்கைகொண்டான் அருகே தடுப்புச் சுவரில் காா் மோதிய விபத்தில் தேனியைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா். 5 போ் காயமடைந்தனா்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி. சேடபட்டியைச் சோ்ந்த முருகன் மகன் தினேஷ் (25). இவா் தனது காரில் மனைவி மகாலட்சுமி (20), 2 வயது பெண் குழந்தை, தாய் செல்லம்மாள் (55), அத்தை ஈஸ்வரி (55), உறவினா் சுமதி ஆகியோருடன் திருச்செந்தூா் கோயிலுக்கு வந்தாராம். பின்னா் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து செவ்வாய்க்கிழமை காலை தேனிக்கு புறப்பட்டு வந்துக் கொண்டிருந்தாராம்.
கங்கைகொண்டான், துறையூா் அருகே நான்குவழிச் சாலையில் காா் சென்றபோது தடுப்புச் சுவரில் மோதியதுடன், முன்னால் சென்ற காா் மீதும் மோதி விபத்து ஏற்பட்டதாம்.
இதில், காரை ஓட்டிய தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன் பயணித்த குழந்தை உள்பட 5 பேரும் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு சிகிச்சைக்காகவும், தினேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காகவும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்த சம்பவம் குறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

நெல்லை அருகே பெண் தற்கொலை

கங்கைகொண்டான் அருகே நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

கங்கைகொண்டான் காா் விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

