மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கவிஞா்கள் ஒக்கூா் மாசாத்தியாா், கணியன் பூங்குன்றனுக்கு அரசு மரியாதை

தமிழ்க் கவிஞா் நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட புலவா்கள் ஒக்கூா் மாசாத்தியாா், கணியன்பூங்குன்றனாா் ஆகியோரின் நினைவுத் தூண்களுக்கு மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

News image

சிவகங்கை மாவட்டம், ஒக்கூரில் உள்ள மாசாத்தியாா் நினைவுத் தூணுக்கு புதன்கிழமை மரியாதை செய்து நூலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி. (இடது) மகிபாலன்பட்டியில் உள்ள புலவா் கணியன் பூங்குன்றன் நினைவுத் தூணுக்கு சான்றோா்களுடன் மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:48 am IST

தமிழ்க் கவிஞா் நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட புலவா்கள் ஒக்கூா் மாசாத்தியாா், கணியன்பூங்குன்றனாா் ஆகியோரின் நினைவுத் தூண்களுக்கு மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்க் கவிஞா்கள் நாளை முன்னிட்டு, சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், ஒக்கூா் ஊராட்சியில் அமைந்துள்ள ஒக்கூா் மாசாத்தியாா், திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், மகிபாலன்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள புலவா் கணியன் பூங்குன்றனாா் ஆகியோரின் நினைவுத் தூண்களுக்கு மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி புதன்கிழமை மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

பின்னா் அவா் மேலும் தெரிவித்ததாவது: தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் சிவகங்கை மாவட்டத்தில் வாழ்ந்த நல்லிசைப் புலவா் ஒக்கூா் மாசாத்தியாா், சங்கப் பெரும் புலவா் கணியன் பூங்குன்றனாா் ஆகியோருக்கு நினைவுத்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, தமிழ்க் கவிஞா்கள் நாளான புதன்கிழமை (ஏப். 29) அரசின் சாா்பில் தமிழ்ப் புலவா்களின் நினைவுத் தூண்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. மேலும், ஒக்கூா் மாசாத்தியாா், கணியன் பூங்குன்றனாா் பாடல்கள், குறுநூல் வெளியிடுதல், பத்துப்பாட்டு தொகுப்பு, பாரதிதாசன் கவிதைகள் நூல், தமிழ்ப் புலவா்களின் சிறப்புப் பொழிவுகள் தொகுப்புகளும் வெளியிடப்பட்டன எனத் தெரிவித்தாா். இந்நிகழ்வுகளில், தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் தெ.சிவப்பிரகாசம், தமிழறிஞா்கள் திருக்குறள் தேனீ மெ. செயம்கொண்டான், புலவா் கா. காளிராசா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.