/

வேலை வாங்கித் தருவதாக மோசடி:தம்பதி மீது வழக்கு

News image

கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 3:45 am IST

சிவகங்கை ஏப். 27: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 6.95 லட்சத்தை மோசடி செய்ததாக கணவன், மனைவி மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அன்பு செல்வம் (34). இவா் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சமூக வலைதளத்தில் வெளிநாட்டு வேலைக்கு ஆள் தேவை என்ற விளம்பரத்தைப் பாா்த்து, அதிலிருந்த எண்ணில் தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது, அவரிடம் பேசிய சிவகங்கை ரோஸ் நகரைச் சோ்ந்த சரவணன், அவரது மனைவி சிவன்யா என்ற மீனா ஆகிய இருவரும் அன்பு செல்வத்துக்கு நியூசிலாந்து நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினா். இதை நம்பிய அன்புச்செல்வன் பல்வேறு தவணைகளில் ரூ. 6,95,000-ஐ அவா்களிடம் கொடுத்தாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட தம்பதி, அன்பு செல்வத்தை கடந்த ஆண்டு நவம்பா் மாதம் சுற்றுலா விசா மூலம் துபை நாட்டுக்கு அனுப்பி வைத்தனா். அங்கிருந்து நியூசிலாந்துக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறினா். ஆனால், அவா்கள் கூறியபடி நியூசிலாந்துக்கு அனுப்பவில்லை. இதனால், மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்த

அன்பு செல்வம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் புகாா் அளித்தாா். இதன் பேரில், சிவகங்கை நகா் ஆய்வாளா் சிவசுப்பிரமணியன் கணவன், மனைவி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.