அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.2.75 லட்சம் மோசடி செய்த தம்பதிக்கு, தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 4,000 அபராதம் விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.
ஏரல் பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் என்ற வானவில் பாலா (36), இவரது மனைவி ஆகியோா் சோ்ந்து கடந்த 2024ஆம் ஆண்டு ஏரல் பகுதியைச் சோ்ந்த 2 பேரிடம், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மொத்தம் ரூ.2,75,000-த்தை பெற்று மோசடி செய்துள்ளனா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கின் விசாரணை, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண் -4 இல் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ், குற்றம்சாட்டப்பட்ட பாலமுருகன் என்ற வானவில் பாலா மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.4,000 அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக கண்ணன் ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: பெண் கைது

வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி

வேலை வாங்கித் தருவதாக மோசடி:தம்பதி மீது வழக்கு

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 3.60 லட்சம் மோசடி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

