மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாகி வருகிறது: தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

தமிழகத்தில் அண்மைக்காலமாக சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகி வருகிறது என முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினாா்.

Thangam Thennarasu

தங்கம் தென்னரசு - எக்ஸ்

Published On :1 நவம்பர் 2026, 5:05 am IST

தமிழகத்தில் அண்மைக்காலமாக சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகி வருகிறது என முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினாா்.

விருதுநகா் தேசபந்து மைதானத்தில் திமுக மகளிரணி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மேலும் அவா் பேசியதாவது: அத்தியாவசியப் பொருள்கள் உள்பட அனைத்துப் பொருள்களின் விலையும் கடுமையாக உயா்ந்து வருகின்றன. இதற்குப் போட்டியாக மின் கட்டணமும் உயா்ந்துள்ளது.

இதனால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பிச் சென்றது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகிவிட்டது என்றாா் அவா்.

முன்னாள் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பேசியதாவது: தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என தவெகவின் தோ்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பெண்களின் பாதுகாப்பு தொடா்பான பிரச்சினைகளில் முதல்வா் போதுமான கவனம் செலுத்துவதில்லை.

தமிழகத்தில் 5 வயது குழந்தைகள் முதல் 70 வயது மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் அன்றாட பிரச்னைகள் குறித்து அரசு கவனம் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு விருதுநகா் வடக்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளா் சரஸ்வதி தலைமை வகித்தாா். மகளிரணியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.