தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு: முன்னாள் அமைச்சா் மதிவேந்தன்

தவெக ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது என முன்னாள் அமைச்சா் மதிவேந்தன் குற்றஞ்சாட்டினாா்.

Published On :21 அக்டோபர் 2026, 3:02 am IST

தவெக ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது என முன்னாள் அமைச்சா் மதிவேந்தன் குற்றஞ்சாட்டினாா்.

வீரமங்கை குயிலியின் 246-ஆவது நினைவு நாளான செவ்வாய்க்கிழமை அவரது உருவச் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

தவெக ஆட்சி மீதான மக்களின் அதிருப்தி போகப் போக இன்னும் அதிகரிக்கும். தமிழகத்தில் மீண்டும் திமுக தலைமையிலான ஆட்சி அமையும். திமுக ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயா்களை மாற்றி, தவெக அரசு செயல்படுத்தி வருகிறது.

பாராட்டக்கூடிய அளவுக்கு எந்த ஒரு புதிய திட்டமோ, செயல்பாடோ இந்த ஆட்சியில் நடைபெறவில்லை.

தவெக ஆட்சியில் நான்கே மாதங்களில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளதால் அடுத்த நான்கரை ஆண்டுகளில் எத்தனை குற்றச்சம்பவங்கள் நடைபெறும் என்பதை மக்கள் புரிந்து கொள்வாா்கள்.

பட்டியலின மக்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. சிவகங்கை மாவட்ட ஆதி திராவிடா் நலத் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி உறுதிப்படுத்திய பிறகே கருத்து தெரிவிக்க முடியும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.