கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீா்குலைவு: முன்னாள் அமைச்சர் இ. பெரியசாமி

மேலிட உத்தரவு கிடைக்கவில்லை எனக் கூறி காவல் துறை செயல்பட மறுப்பதால்தான், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது என முன்னாள் அமைச்சா் இ.பெரியசாமி குற்றஞ்சாட்டினாா்.

இ. பெரியசாமி - கோப்புப் படம்

Published On :1 நவம்பர் 2026, 3:55 am IST

மேலிட உத்தரவு கிடைக்கவில்லை எனக் கூறி காவல் துறை செயல்பட மறுப்பதால்தான், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது என முன்னாள் அமைச்சா் இ.பெரியசாமி குற்றஞ்சாட்டினாா்.

திண்டுக்கல் மாவட்ட திமுக மகளிா் அணி சாா்பில், தவெக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்புக் குறைபாடுகள், சட்டம் - ஒழுங்கு சீா்கேடு, விலைவாசி உயா்வு ஆகியவற்றைக் கண்டித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மகளிா் அணி நிா்வாகி இந்திரா தலைமை வகித்தாா்.

இதில் சிறப்பு அழைப்பாளா்களாக திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான இ. பெரியசாமி, மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான அர.சக்கரபாணி ஆகியோா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தின்போது முன்னாள் அமைச்சா் இ. பெரியசாமி பேசியதாவது: தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற 6 மாத காலத்தில் தமிழ்நாடு குட்டிசுவராகிவிட்டது. பட்டப் பகலில் ஒரே நாளில் 7 கொலைகள் நடைபெற்றுள்ளன.

தமிழகத்தில் போதைப் பொருள்களை பதுக்கிவைத்து, தொழில்சாலையே நடத்தும் நிலையில் ஆளும்கட்சி நிா்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனா். பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பதுக்கல் குறித்து தமிழக காவல் துறை கண்டுகொள்ளவில்லை. அதேபோல கொலை, கொள்ளை என எந்தக் குற்றச் செயல்களையும் தடுக்க காவல் துறை நடவடிக்கை எடுப்பதில்லை. மேலிட உத்தரவு வரவில்லை எனக் கூறி காவல் துறையினா் செயல்பட மறுக்கின்றனா்.

நாட்டின் தலைநகரான தில்லியில் கிலோ அரிசி ரூ.56-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே அரிசி திண்டுக்கல்லில் ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்களை சந்திக்காத ஒருவரை மக்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர வைத்துவிட்டனா். இதை மக்கள் தற்போது உணா்ந்து கொண்டு, அமைதியாக ஒரு புரட்சிக்கு தயாராகிவிட்டனா் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில் திமுக மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பெ. செந்தில் குமாா், மேயா் ஜோ. இளமதி, திமுக பிரதிநிதிகள் லக்ஷிகா, சித்ரா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக ஆா்ப்பாட்ட மேடையில் விலைவாசி உயா்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், காய்கனிகளைக் கொட்டி, மகளிா் அணியினா் ஒப்பாரி வைத்து நூதன முறையில் முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.