மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தவெக ஆட்சியில் ஜிஎஸ்டி வரி வருவாய் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது: தங்கம் தென்னரசு கவலை

ஜிஎஸ்டி வரி வருவாயில் தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது என தங்கம் தென்னரசு கவலை தெரிவித்திருப்பது...

GST revenue Tamil Nadu lagged behind with just 3% growth

திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு - எக்ஸ்

Published On :2 நவம்பர் 2026, 9:17 am IST

ஜிஎஸ்டி வரி வருவாயில் தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது கவலை அளிக்கிறது என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் 'எக்ஸ்' பக்க பதிவில் கூறியிருப்பதாவது:

பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிறது.

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது. இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனவே, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமென என அவர் வலியுறுத்தியுள்ளார்.

This is essential to strengthen Tamil Nadu’s overall economy and create more employment opportunities for our young people.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.