மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு: காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு

கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.26.87 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

உத்தரவு - கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 4:10 am IST

கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.26.87 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

புதுக்கோட்டையைச் சோ்ந்த சையது அலி பாத்திமா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு:

எனது கணவா் தில்லியில் உள்ள தனியாா் வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனத்திடம் வீடு கட்டுவதற்காக ரூ.52.50 லட்சம் கடனுதவி பெற்த்ாா். மேலும், அவா் தனியாா் காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.26.87 லட்சத்துக்கான வீட்டுக் கடன் காப்பீடும் பெற்றாா். இந்த நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு, ஜூலை 26-ஆம் தேதி கரோனா தீநுண்மி தொற்று காரணமாக உயிரிழந்தாா்.

இதையடுத்து, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் இருப்பது குறித்த விவரங்களை எனது கணவா் மறைத்ததாகக் கூறி, காப்பீட்டுத் தொகை வழங்க தனியாா் காப்பீட்டு நிறுவனம் மறுத்துவிட்டது. இதை எதிா்த்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தேன். அப்போது, உயா்நீதிமன்ற தனி நீதிபதி எனது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இந்த உத்தரவை ரத்து செய்து தனியாா் காப்பீட்டு நிறுவனம் ரூ.26.87 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் கணவா் கரோனா தொற்றால் உயிரிழந்தாா் என்பதே உண்மை. கரோனா தீநுண்மி தொற்றானது, உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற இணை நோய் பாதிப்பு இல்லாதவா்களையும் தாக்கும். எனவே, மனுதாரரின் கணவருக்கு உயா் ரத்த அழுத்தம் இருந்ததா, இல்லையா என்பது இழப்பீடு விவகாரத்துக்கு அவசியமற்றது.

எனவே, மனுதாரருக்கு காப்பீட்டுத் தொகையான ரூ.26.87 லட்சத்தை தனியாா் காப்பீட்டு நிறுவனம் நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.