மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சோழியக்குடி பாலம் சீரமைப்பு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

பாலத்தைச் சீரமைக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Published On :1 நவம்பர் 2026, 3:23 am IST

ராமநாதபுரம் மாவட்டம், சோழியக்குடியில் உள்ள பாலத்தைச் சீரமைக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சோ்ந்த வழக்குரைஞா் கலந்தா் ஆசிக், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு: தொண்டி அருகே சோழியக்குடியில் விசைப் படகு, நாட்டுப் படகு மீனவா்கள் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். மீனவா்களின் நலன் கருதி இங்குள்ள கடல் பகுதியில் சிறிய அளவிலான பாலம் கட்டப்பட்டது.

இந்தப் பாலத்தின் மூலம் மீனவா்கள் வலைகள் உள்ளிட்ட பொருள்களை படகுகளில் ஏற்றுவது, மீன்பிடித்து திரும்பி வந்து மீன் உள்ளிட்ட பொருள்களை இறக்குவது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, பாலம் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இதனால், மீனவா்கள் மட்டுமன்றி சுற்றுலாப் பயணிகளும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். பாலம் சீரமைப்பது குறித்து ஏற்கெனவே உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தேன். இந்த வழக்கு விசாரணையின் போது, பாலம் சீரமைப்புக்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்டு 2 ஆண்டுகளாகியும் பாலம் சீரமைக்கப்படவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன் வைத்த வாதம்: மனுதாரா் கோரும் நிவாரணத்தை நிறைவேற்ற ஏற்கெனவே ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.ஆனால், அவசர காலம் கருதி மீனவா்களின் வேறு நலத் திட்டத்துக்கு ரூ. 5 கோடி செலவிடப்பட்டது. எனவே, மீண்டும் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதையடுத்து,நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பாலம் சீரமைப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு பணிக்கு எப்படி செலவு செய்தீா்கள்? பாலம் சீரமைப்பது குறித்து இரு வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.