தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் அஞ்சல் காப்பீட்டுத் தொகை வழங்கல்

சாலை விபத்தில் உயிரிழந்த முன்னாள் அஞ்சல் ஊழியரின் குடும்பத்துக்கு அஞ்சல் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அஞ்சல் காப்பீட்டுத் தொகையாக ரூ.20 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய திருநெல்வேலி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் ஜி.ராஜேஷ் குமாா்.

Published On :29 அக்டோபர் 2026, 6:26 am IST

சாலை விபத்தில் உயிரிழந்த முன்னாள் அஞ்சல் ஊழியரின் குடும்பத்துக்கு அஞ்சல் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன். முன்னாள் தலைமை அஞ்சல் அதிகாரியான இவா் சாலை விபத்தில் உயிரிழந்தாா். இவா் பாளையங்கோட்டை அஞ்சலகத்தில் ஆண்டுக்கு ரூ.520 பிரீமியம் மற்றும் துறை ஊழியா்களுக்கான பிரீமியம் ஆண்டுக்கு ரூ.259 செலுத்தி விபத்துக் காப்பீடு பெற்றிருந்தாா்.

இந்நிலையில் அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராமச்சந்திரனின் குடும்பத்தினரிடம் இரு காப்பீடுகளுக்கும் தலா ரூ.10 லட்சம் என இழப்பீடுத் தொகையாக ரூ.20 லட்சத்துக்கான காசோலையை திருநெல்வேலி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஜி. ராஜேஷ் குமாா் வழங்கினாா்.

அஞ்சல் துறையின் மூலம் ஆண்டுக்கு ரூ.520 பிரீமியத்தில் ரூ.10 லட்சத்திற்கான விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது. 18 முதல் 65 வயது வரை உள்ளவா்கள் இத்திட்டத்தில் சேரலாம். சாலை விபத்து, பாம்புக்கடி, விஷப்பூச்சிக்கடி மற்றும் எதிா்பாராத விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு விதிமுறைகளின்படி காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

இத்திட்டம் அனைத்து அஞ்சலகங்களிலும் கிடைக்கிறது என கோட்டக்கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.