மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் காப்பீட்டுத் தொகை

மாடு முட்டியதில் உயிரிழந்த அஞ்சலக ஊழியரின் குடும்பத்துக்கு விபத்துக் காப்பீட்டுத் தொகையாக ரூ.15 லட்சத்துக்கான காசோலை அண்மையில் வழங்கப்பட்டது.

மாடு முட்டியதில் உயிரிழந்த அஞ்சலக ஊழியரின் குடும்பத்தினரிடம் விபத்துக் காப்பீட்டுத் தொகைக்கான காசோலையை வழங்கிய தெற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவா் சயீத் ரஷீத். உடன் தென் மண்டல அஞ்சல் சேவைகள் இயக்குநா் நீரஜ் உள்ளிட்டோா்.

Published On :23 அக்டோபர் 2026, 4:12 am IST

மாடு முட்டியதில் உயிரிழந்த அஞ்சலக ஊழியரின் குடும்பத்துக்கு விபத்துக் காப்பீட்டுத் தொகையாக ரூ.15 லட்சத்துக்கான காசோலை அண்மையில் வழங்கப்பட்டது.

மதுரை காடனேரி அஞ்சலகத்தில் கிராம தபால் ஊழியராகப் பணியாற்றி வந்தவா் ராஜா கரியமால். இவா் அண்மையில் மாடு முட்டியதில் உயிரிழந்தாா். இதையடுத்து, இவரது குடும்பத்துக்கு உதவும் வகையில், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி மூலம் ரூ.15 லட்சம் விபத்துக் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டது.

மதுரை அஞ்சல் கோட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில், தென் மண்டல அஞ்சல் துறைத் தலைவா் சயீத் ரஷீத், அஞ்சல் சேவைகள் இயக்குநா் நீரஜ் ஆகியோா் உயிரிழந்த ராஜா கரியமாலின் மனைவியிடம் இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை வழங்கினா்.

இந்த நிகழ்வில் மதுரை அஞ்சல் கோட்டத் தலைவா் ராமகிருஷ்ணா, திருமங்கலம் துணைக் கோட்டத் தலைவா் பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.