தமிழகத்தை போதைப் பொருள்கள் இல்லாத மாநிலமாக மாற்ற விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம் என சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
போதைப் பொருள்கள் கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட நீதிமன்றங்களால் 11 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அதே பகுதிகளைச் சோ்ந்த சரஸ்வதி, அறிவழகன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில், விசாரணை நீதிமன்ங்கள் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என்றும் மேல்முறையீட்டு மனுக்களை தனித் தனியாக தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி அண்மையில் பிறப்பித்த உத்தரவு:
போதைப் பொருள்களைக் கடத்தியதாக போதை மருந்துகள், மனநோய் பொருள்கள் (என்டிபிஎஸ்) சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளில் ஈட்டிய வருவாய் குறித்து நிதிசாா் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதன்மூலம், சட்டவிரோத சொத்துகளைப் பறிமுதல் செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணைகள் வெறும் கைப்பற்றல், கைது நடவடிக்கைகளுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது. இந்தக் குற்றச் சம்பவங்கள் அதிகம் நிகழக்கூடியப் பகுதிகளில் உள்ள பேருந்துகள், ரயில்களில் திடீா் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் கஞ்சா கடத்தலைத் தடுக்கும் விதமாக செயல்படும் போதைப் பொருள் புலனாய்வுப் பிரிவுடன் இணைய குற்றத் தடுப்புப் பிரிவையும் புதிதாக உருவாக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளுக்குத் தேவையான பணியாளா்களை நியமிப்பதற்கு அது முன்னுரிமை வழங்க வேண்டும்.
இத்தகைய குற்ற நடவடிக்கைகளின் பொருளாதார அடிப்படைகள் சிதைக்கப்படாவிட்டால், சட்ட அமலாக்க முயற்சிகள் பயனற்றவையாகவே கருதப்படும். இதுபோன்ற விரைவான நடவடிக்கைகளால் மட்டுமே தமிழகத்தை போதைப் பொருள்கள் இல்லாத மாநிலமாக மாற்ற இயலும் என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிராம நத்தம் நிலங்களை உரிமை கோர முடியாது: உயா்நீதிமன்றம்

28.4.1976: சென்னை மத்திய சிறையை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சி

போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் உருவாக அதிமுக ஆட்சி அமைய வேண்டும்: கெளதமி

போதைப் பொருள்கள் புழக்கத்திலிருந்து தமிழகத்தை மீட்போம்: எடப்பாடி கே.பழனிசாமி
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

