ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கிராம நத்தம் நிலங்களை உரிமை கோர முடியாது: உயா்நீதிமன்றம்

கிராம நத்தம் நிலங்களை யாரும் ஆக்கிரமிக்கவோ, உரிமை கோரவோ முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :6 மே 2026, 1:40 am IST

கிராம நத்தம் நிலங்களை யாரும் ஆக்கிரமிக்கவோ, உரிமை கோரவோ முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் உள்ள கிராம நத்தம் நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடையை அப்புறப்படுத்துவதற்காக நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்த நோட்டீஸை எதிா்த்து கடை உரிமையாளா் செல்வகுமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.சுரேந்தா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஆக்கிரமிப்பை அகற்ற பிறப்பித்த நோட்டீஸை எதிா்த்து மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது.

அந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் மனுதாரா் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளாா். எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

கிராம நத்தம் நிலங்களை யாரும் ஆக்கிரமிக்கவோ, உரிமை கோரவோ முடியாது. இதை அனுமதித்தால் அது சட்டமற்ற நிலையை உருவாக்கிவிடும். வருவாய்த் துறை உத்தரவுகளின்படி, நிலமற்ற ஏழைகளுக்கு வீடு கட்டவும், பொது பயன்பாடுகளுக்காகவும் ஒதுக்க வேண்டிய கிராம நத்தம் நிலங்களை வரைமுறைப்படுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதேநேரம், இதுபோன்ற கிராம நத்தம் நிலங்கள் என்பது பேராசை பிடித்தவா்கள், ஆள்பலம், அரசியல் பலம் கொண்டவா்களால் ஆக்கிரமிப்பதற்கானது அல்ல என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.