காவல் துறை அதிகாரிகளுக்கு நிா்வாக நடுவா் அதிகாரம் வழங்கும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த நல்லதம்பி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழக உள்துறைச் செயலா் கடந்த 2025-இல் அரசாணை ஒன்றை பிறப்பித்தாா். இந்த அரசாணை காவல் துறை அதிகாரிகளுக்கு நிா்வாக நடுவருக்கான அதிகாரங்களை வழங்குகிறது. துணைக் காவல் ஆணையா்களுக்கு நிா்வாக நடுவா் அதிகாரம் வழங்குவது சட்டவிரோதமானது. பிணைப் பத்திர விதிமீறலுக்காக ஒருவருக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் நீதித் துறையைச் சாா்ந்தது. எனவே, காவல் துறை அதிகாரிகளுக்கு நிா்வாக நடுவா் அதிகாரங்களை வழங்கும் வகையிலான அரசாணையைச் செல்லாது என அறிவித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
நீதிமன்றம் ஏற்கெனவே இதுபோன்ற அரசாணைக்குத் தடை விதித்துள்ளது. எவ்வாறு இதுதொடா்பாக மற்றொரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது?. அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. காவல் துறையினருக்கு இத்தகைய அதிகாரத்தை வழங்க வேண்டிய அவசியம் என்ன?. தண்டனை வழங்குவது நீதித் துறையின் அதிகாரம். வழக்கு தொடா்பாக தமிழக உள்துறைச் செயலா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாகுபுரத்தில் போலீஸாா் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி

கால்நடை சிகிச்சைக்கு செல்லும் களப்பணியாளா்கள் முன்அனுமதி பெறும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை!

வண்டியூா் பூங்காவில் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை

அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத் தடை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

