மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத் தடை

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

News image

அனிதா ராதாகிருஷ்ணன்

Updated On :16 ஏப்ரல் 2026, 1:39 am IST

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.7 கோடி சொத்து சோ்த்ததாக அவா் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில் அவரது குடும்பத்தினா் பெயரும் சோ்க்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கின் அடிப்படையில் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனுக்கு எதிராக 2025-ஆம் ஆண்டு பண முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில், தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி அமலாக்கத் துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்க ஊழல் தடுப்புத்துறை தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விசாரணையை ஏப்.30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

அப்போது அமலாக்கத் துறை தரப்பில், இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தூத்துக்குடி நீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கைத் தொடா்ந்து விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.