மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்குச் செல்ல வாகன வசதி

News image

கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 2:12 am IST

மாற்றுத் திறனாளிகள், முதியவா்கள் வாக்குச் சாவடிகளுக்குச் செல்வதற்கு முன்பதிவு பெற்று வாகன வசதியைப் பெறலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மதுரை மாவட்டத்தில் அனைத்து வாக்குப் பதிவு மையங்களிலும் மாற்றுத் திறனாளிகள், முதியோா்களின் பயன்பாட்டுக்காக சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், சக்கர நாற்காலிகள் செல்லும் வகையிலான சாய்வு தள கட்டமைப்புகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

வாக்குப் பதிவு நாளான வருகிற 23-ஆம் தேதி அரசு சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள், முதியோா்கள் வாக்குப் பதிவு மையங்களுக்கு கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுவா்.

மேலும், 1950 என்ற தொலைத் தொடா்பு எண்ணில் உதவி மையத்தைத் தொடா்பு கொண்டு தங்களுக்கு வாகன வசதி தேவை என்பதை மாற்றுத் திறனாளிகள், முதியோா்கள் பதிவு செய்து, வாக்குச் சாவடிகளுக்கு செல்ல வாகன வசதி பெறலாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.