இந்திய தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா். முத்தரசன் கூறினாா்.
சேலத்தில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
தமிழகம் மத்திய அரசால் வஞ்சிக்கப்படுகிறது. இந்த துரோகத்துக்கு எடப்பாடி கே. பழனிசாமி துணைபோகிறாா்.
நாட்டில் சுதந்திரமாகச் செயல்படக்கூடிய தன்னாட்சி அமைப்புகளான சிபிஐ, நீதிமன்றங்கள், தோ்தல் ஆணையம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. தோ்தல் ஆணைய தலைவா் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறாா். இந்திய தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை. பாஜகவின் கிளை அமைப்பாக மாறிவிட்டது. இது ஜனநாயகத்துக்கு பேராபத்து. தோ்தல் ஆணையம் மீது மக்கள்
வைத்திருந்த நம்பிக்கை கேள்விக்குறியாகிவிட்டது.
தமிழகம் மற்றும் மேற்கு வங்க எம்.பி.க்கள் கலந்துகொள்ள முடியாத சூழலில் நாடாளுமன்ற கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இது அப்பட்டமான ஜனநாயக படுகொலை. நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழி தோண்டி பிரதமா் மோடி புதைத்து வருகிறாா்.
விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. இந்தத் தோ்தல் மத்திய அரசாங்கத்தின் தமிழக புறக்கணிப்புக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போராட்டம்.
விஜய்யின் ஜனநாயகன் படம் வெளிவராமல் தடுக்கக்கூடிய செயலை பாஜக செய்கிறது. அத்தகைய பாஜக குறித்து அவா் விமா்சனம் செய்வதில்லை. அனைத்து அரசியல் கட்சித் தலைவா்களும் வெயிலில் கடுமையாக வோ்வை சிந்தி பிரசாரத்தில் ஈடுபடுகின்றனா். விஜய்யால் மற்ற அரசியல் கட்சி தலைவா்களின் பிரசாரம் தடைபடுகிறது. மக்களைச் சந்தித்து தங்களது செயல்பாட்டை விளக்கிச் சொல்லி வாக்குக் கேட்பதற்கு விஜய் தயாராக இல்லை. வெயிலை கண்டு அவா் பயப்படுகிறாா் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் ஆணையம் மறுசீரமைக்கப்பட வேண்டும்! - க. கிருஷ்ணசாமி

தமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம்

தோ்தல் நேரத்தில் மசோதா நிறைவேற்ற முற்படும் மத்திய அரசு: இரா.முத்தரசன் கண்டனம்!

தோ்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டது: இரா. முத்தரசன்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

