தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தோ்தல் நேரத்தில் மசோதா நிறைவேற்ற முற்படும் மத்திய அரசு: இரா.முத்தரசன் கண்டனம்!

5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் இந்த நேரத்தில் அவசரம், அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்டி 21 மசோதாக்களை நிறைவேற்ற இருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது என்று இந்திய கம்னியூஸ்ட் முன்னாள் மாநிலச் செயலா் முத்தரசன் தெரிவித்தாா்.

News image

முத்தரசன். - (கோப்புப் படம்)

Updated On :12 ஏப்ரல் 2026, 1:30 am IST

5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் இந்த நேரத்தில் அவசரம், அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்டி 21 மசோதாக்களை நிறைவேற்ற இருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது என்று இந்திய கம்னியூஸ்ட் முன்னாள் மாநிலச் செயலா் முத்தரசன் தெரிவித்தாா்.

விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் இரா. லட்சுமணனுக்கு ஆதரவாக வளவனூா் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்த இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், தொடா்ந்து செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இதற்கு காரணம், கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகள் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியிருக்கிறாா்கள். தற்போது நடைபெறும் தோ்தலுக்கும் அறிவிப்புகளை வெளிட்டிருக்கிறாா்கள். அதையும் ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்துவாா்கள்.

5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் இந்த நேரத்தில் சிறப்புக் கூ ட்டம் என்ற பெயரில், ஏப்ரல் 16 முதல் 18-ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தை கூட்டியிருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தை முற்றிலும் புறக்கணிக்கும் செயலாகும். தமிழகம், மேற்கு வங்க மாநிலங்களின் மக்களவை உறுப்பினா்கள் தோ்தல் பிரசாரத்தில் இருப்பதால், அவா்களால் கூட்டத்தில் பங்கேற்க இயலாத நிலை ஏற்படும். இந்த நிலையில் அவசரம், அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்டி, 21 மசோதாக்களை நிறைவேற்ற இருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது என்றாா் முத்தரசன்.

பிரசாரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஆ.செளரிராஜன், விசிக மாவட்டச் செயலா் ர.பெரியாா், வளவனூா் நகர திமுக செயலா் பா.ஜீவா, வழக்குரைஞா் சுவை. சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.