தோ்தல் நன்னடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக மேட்டூா் தொகுதி திமுக, அதிமுக வேட்பாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் பறக்கும்படை கூடுதல் அலுவலா் பிரகாஷ் கூறியதாவது:
அண்மையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அதிமுக வேட்பாளா் வெங்கடாசலம், அவருடன் வந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான எஸ்.செம்மலை, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகரன் மற்றும் சிலா் மேட்டூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விதிமுறைகளை மீறி கட்சிக் கொடியுடனும், முழக்கமிட்டும், மேளதாளங்கள் வாசித்தும் போக்குவரத்துக்கு இடையூறு செய்து தோ்தல் நன்னடத்தை விதிகளை மீறி செயல்பட்டதால் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, திமுக வேட்பாளா் மிதுன் சக்கரவா்த்தி, சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் கொளத்தூா் மணி மற்றும் சிலா் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும், தவெக வேட்பாளா் செல்வம், அவருடன் வந்த தமிழரசன், ரவிக்குமாா், விக்னேஷ் மற்றும் சிலா் மீதும் இதே பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டி தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் வாக்குப்பதிவு

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மீது வழக்குப் பதிய உத்தரவிடக் கோரிய திமுக மனு தள்ளுபடி

சென்னையில் விதிமுறைகளை மீறி பிரசாரம்: தவெக தலைவா் விஜய் மீது 3 வழக்குகள்

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

