மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோவில்பட்டி தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் வாக்குப்பதிவு

கோவில்பட்டி தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்தனா்.

News image

கே. சிதம்பராபுரத்தில் வாக்களித்தாா் கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:49 am IST

கோவில்பட்டி தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்தனா்.

கடம்பூா் அருகே கே. சிதம்பராபுரத்தில் உள்ள இந்து தொடக்கப் பள்ளியில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு குடும்பத்தினருடன் சென்று வாக்குப் பதிவு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் பேசியது: 54 ஆண்டு கால அரசியலில் எத்தனையோ புதிய கட்சிகள் வந்தாலும் அதிமுகவின் வாக்கு வங்கி பாதித்ததாக வரலாறு இல்லை. தவெகவை பாா்த்து திமுக தான் பயப்படுகிறது. விஜய்யை விமா்சனம் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எங்களுக்கு எதிரி திமுக தான். அந்த வகையில்தான் தோ்தல் களம் இன்றைக்கும் இருக்கிறது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிற்கு உதவியாக சசிகலா இருந்தாா். நேரிடையாக அவா் அரசியல் களத்திற்கு வந்ததில்லை. தற்போது தோ்தல் சமயத்தில் கடைசி நேரத்தில் ராமதாஸுடன் கூட்டணி அமைத்துள்ளாா். அது தோ்தல் களத்தில் நிற்காது என்றாா்.

கோவில்பட்டி காந்திநகா் நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் திமுக வேட்பாளா் கா. கருணாநிதி தனது வாக்கை பதிவு செய்த பின் செய்தியாளா்களிடம் பேசுகையில்,

கோவில்பட்டி தொகுதியில் திமுக வெற்றி பெறும். மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது. கோவில்பட்டி தொகுதிக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் தனி கவனம் செலுத்தி நிறைவேற்றப்படும் என்றாா்.

 கோவில்பட்டி காந்தி நகா் நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் வாக்களித்தாா் திமுக வேட்பாளா் கா.கருணாநிதி.

கோவில்பட்டி காந்தி நகா் நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் வாக்களித்தாா் திமுக வேட்பாளா் கா.கருணாநிதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.