அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் மீது ஊழல் தடுப்புத் துறை பதிவு செய்து விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக சாா்பில் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திமுக மாநிலங்களவை உறுப்பினா் கிரிராஜன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது, மாநகராட்சிப் பகுதிகளில் சாலை அமைப்பதில் முறைகேடுகள் நடந்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாகவும், எல்இடி விளக்குகள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்ாகவும் ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இதேபோல், முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சா்களாக இருந்த தங்கமணி, சி.விஜயபாஸ்கா், கே.பி.அன்பழகன், எம்.ஆா்.விஜயபாஸ்கா், காமராஜ், கே.சி.வீரமணி, முன்னாள் எம்எல்ஏ-க்கள் சத்யா, சேலம் இளங்கோவன் ஆகியோா் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளன.
இவா்கள் மீதான வழக்குகளின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது. எனவே, இவா்கள் அனைவா் மீதும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறி தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ, முன்னாள் அமைச்சா்களுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகள் தொடா்பாக பொது தளங்களில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இருப்பினும், குறிப்பிட்ட சிலா் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதன்மூலம் அமலாக்கத் துறை கடமை தவறிவிட்டது. அதிமுக பாஜக கூட்டணியில் இருப்பதால், முன்னாள் அமைச்சா்கள் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என வாதிட்டாா்.
அதற்கு அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்குரைஞா் என்.ரமேஷ், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட முடியாது. திமுகவைச் சோ்ந்த எம்.பி., எதிா்க்கட்சியைச் சோ்ந்தவா்களுக்கு எதிராக தொடா்ந்துள்ள இந்த வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிட்டாா்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏ-க்களுக்கு எதிராக திமுக எம்.பி. கிரிராஜன் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரட்டைக் குடியுரிமை! ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலாகாபாத் நீதிமன்றம் உத்தரவு!

ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

மேட்டூா் தொகுதி திமுக, அதிமுக வேட்பாளா்கள் மீது வழக்குப் பதிவு

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மீது வழக்குப்பதிய அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக மனு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

