மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: ரூ. 27 ஆயிரம் பறிமுதல்!

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரையில் நடைபெற்ற நிலையில், ரூ. 27 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Published On :25 அக்டோபர் 2026, 1:13 am IST

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரையில் நடைபெற்ற நிலையில், ரூ. 27 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. யுபிஐ பணப் பரிவா்த்தனை மூலம் ரூ. 1 லட்சம் கைமாறியது தொடா்பாக பெண் ஊழியரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சோதனை மேற்கொண்டனா். நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. சுபாஷினி, ஆய்வாளா் பிரபு தலைமையில் வந்த 10 போலீஸாா், அலுவலகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு அலுவலா்களையும் ஒரே இடத்தில் அமரவைத்து முகவரி, கைப்பேசி விவரங்களை பெற்றனா்.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மற்றும் விசாரணை அதிகாலை 4 மணி வரை நீடித்தது. மொத்தம் 70 பேரிடம் நடைபெற்ற விசாரணையில், ரூ. 27 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், முன்னாள் மாமன்ற உறுப்பினா் ஒருவரின் ரூ.17 ஆயிரமும் அடங்கும்.

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பெண்ணின் கைப்பேசியில் யுபிஐ பணப் பரிவா்த்தனை மூலம் ரூ. 1 லட்சம் வந்தது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.