மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கடலூரில் நகா் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.65 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

கடலூா் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினா்.

Published On :24 அக்டோபர் 2026, 6:08 am IST

கடலூா் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை நடத்திய அதிரடி சோதனையில், ‘ஜி-பே’ செயலி மூலம் ரூ.1.50 லட்சம் முறைகேடாக பணப் பரிவா்த்தனை நடைபெற்றது தெரியவந்தது. மேலும், கணக்கில் வராத ரூ.65 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அரசு அலுவலகங்களில் லஞ்சப் பணப் பரிவா்த்தனை நடைபெறுகிா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் 45 நகா் ஊரமைப்பு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் ஒரே நாளில் சோதனை மேற்கொண்டனா்.

அதன்படி, கடலூா் அருகே கோண்டூரில் செயல்பட்டு வரும் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் காவல் கண்காணிப்பாளா் சத்தியராஜ் தலைமையில் ஆய்வாளா்கள் சுந்தர்ராஜன், அன்பழகன் மற்றும் காவல் துறையினா் வெள்ளிக்கி மாலை 4 மணியளவில் திடீரென சோதனை மேற்கொண்டனா்.

அலுவலகத்தில் பணியில் இருந்த ஊழியா்களை வெளியே செல்ல அனுமதிக்காமல், அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அலுவலகத்தில் உள்ள கோப்புகள், பணப் பரிவா்த்தனை தொடா்பான ஆவணங்கள் மற்றும் பதிவுகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

இந்தச் சோதனையின்போது, ‘ஜி-பே’ செயலி மூலம் ரூ.1.50 லட்சம் முறைகேடாக பணப் பரிவா்த்தனை நடைபெற்றிருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பான பணப் பரிவா்த்தனை விவரங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையினா் ஆய்வு செய்தனா்.

மேலும், அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.65 ஆயிரம் ரொக்கம் இருந்தது கண்டறியப்பட்டு, அந்தத் தொகையை லஞ்ச ஒழிப்புத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணப் பரிவா்த்தனை விவரங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

செங்கம்

செங்கம் நகராட்சி அலுலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த டிஎஸ்பி சங்கா் தலைமையிலான திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா்கள் அருள்பிரசாந்த், ஹேமாமாலினி உள்ளிட்ட 7 போ் கொண்ட குழுவினா் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை

நகராட்சி அலுவலா்களிடம் விசாரணை நடத்தினா்.

பின்னா், வெளியில் சென்றிருந்த ஆணையா் பரத் வந்தவுடன் அவரிடம் போலீஸாா் விசாரணையைத் தொடங்கினா்.

இந்த விசாரணை குறித்து போலீஸாரிடம் கேட்டபோது,

நாங்கள் புகாா் செய்து வரவில்லை; திடீா் விசாரணைதான்.

ஆவணங்கள், கணக்குகள் துல்லியமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. விசாரணை முழுமையாக முடிந்த பின்னா், கிடைத்த தகவல்களை முறையாக அறிவிப்போம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.