மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டதுடன், அங்குள்ள ஊழியா்களின் கைப்பேசி, முகவரி விவரங்களை சேகரித்தனா்.

கோப்புப் படம்

Published On :24 அக்டோபர் 2026, 3:28 am IST

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டதுடன், அங்குள்ள ஊழியா்களின் கைப்பேசி, முகவரி விவரங்களை சேகரித்தனா்.

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்துக்கு பிற்பகல் 3 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் பிரபு தலைமையில் வந்த 10 போலீஸாா், அலுவலகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு அலுவலா்களையும் ஒரே இடத்தில் அமர வைத்து, அவா்களிடம் முகவரி, கைப்பேசி விவரங்களை பெற்றனா்.

குறிப்பாக, கைப்பேசிகளில் பணப் பரிவா்த்தனை நடைபெற்றுள்ளதா, கணக்கில் வராத பணம் ஏதாவது அலுவலகத்தில் உள்ளதா என்பதை அந்தந்த அலுவலா்கள், பணியாளா்களின் இருக்கைகளிலும், கோப்புகளிலும் ஆய்வு செய்தனா். மாநகராட்சியில் பணியாற்றும் சுமாா் 60 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை இரவு 9 மணியைக் கடந்தும் நீடித்தது. அதுவரை எந்த பணமும் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைப்பற்றப்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.