பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கரூா் நகா் ஊரமைப்பு அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

கரூரில் வெள்ளிக்கிழமை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்திய லட்சுமிபுரத்தில் உள்ள நகா் ஊரமைப்பு அலுவலகம்.

Published On :24 அக்டோபர் 2026, 5:19 am IST

கரூா் நகா் ஊரமைப்பு அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

கரூா் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகம் லட்சுமிபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் விவசாய நிலங்களை குடியிருப்பு மற்றும் வணிக நிலங்களாக மாற்றுவதற்கும் , பெரிய மனைப்பிரிவுகளுக்கும், கட்டடங்களுக்கும் திட்ட அனுமதி வழங்க அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரையடுத்து, மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் துணைக்காவல் கண்காணிப்பாளா் ஜான் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோா் திடீா் சோதனை மேற்கொண்டனா். சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.24,000 கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வங்கி பணப்பரிவா்த்தனையில் ரூ.80,000 கையாளப்பட்டுள்ளது தெரியவந்தது. அதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.