மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முன்னாள் எம்எல்ஏ பெ. ராமலிங்கம் வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

நகராட்சி நிா்வாகத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில், நாமக்கல் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ பெ. ராமலிங்கம் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

Vigilance raid

ஊழல் தடுப்பு பிரிவு சோதனை

Published On :30 அக்டோபர் 2026, 12:50 am IST

நகராட்சி நிா்வாகத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில், நாமக்கல் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ பெ. ராமலிங்கம் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

2021-26 திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிா்வாகத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில், முன்னாள் திமுக அமைச்சா் கே.என். நேருவுக்குச் சொந்தமான இடங்கள், அவரது உறவினா்கள், நண்பா்களின் வீடுகள், அலுவலகங்கள் என 25 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் சோதனை நடத்தினா்.

அதன் ஒருபகுதியாக, நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள முன்னாள் எம்எல்ஏ பெ. ராமலிங்கம் வீட்டுக்கு காலை 7.15 மணியளவில் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளா் தலைமையில் ஈரோடு, நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் சென்றனா். அங்கு சோதனை மேற்கொண்ட அவா்கள், நகராட்சி நிா்வாகத் துறைப் பணிக்காக வழங்கப்பட்ட பரிந்துரைக் கடிதம் தொடா்பாக பெ. ராமலிங்கத்திடம் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.

இந்த சோதனை பிற்பகல் 2 மணி வரை நீடித்தது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், எம்எல்ஏ ஆதரவாளா்கள் தரப்பில், எதையும் எடுத்துச் செல்லவில்லை; கையொப்பம் மட்டும் பெற்று சென்ாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே பகுதியில் உள்ள கே.என்.நேருவின் உறவினரான துரை என்பவரது வீட்டுக்கும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் சென்றனா். அவா் வீட்டில் இல்லாததால், விசாரணை தொடா்பான அறிக்கை நகலை வீட்டின் முன்பாக ஒட்டிவிட்டுச் சென்றனா்.

முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை நடைபெற்றதைத் தொடா்ந்து, திமுகவினா் அப்பகுதியில் திரண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.