மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா்.

Published On :24 அக்டோபர் 2026, 12:21 am IST

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை திடீா் சோதனை நடத்தினா்.

சேலம் சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி வரிவசூல் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் அலுவலா்கள், மாநகராட்சியால் நிா்ணயிக்கப்பட்ட வீட்டு வரிக்கான தொகையைவிட அதிகமாக வசூல் செய்வதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜேஷ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை திடீா் சோதனை நடத்தினா்.

இந்த சோதனை மூன்று குழுவாகப் பிரிந்து அலுவலகம் முழுவதும் நடைபெற்றது. லஞ்ச ஒழிப்பு ஆய்வாளா்கள் நல்லம்மாள், முருகன், நரேந்திரன், ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்த சோதனையில், பொதுமக்களிடம் வசூல் செய்யப்பட்ட வரி விவரங்கள் அடங்கிய கோப்புகளை ஆய்வு செய்தனா். இதில் எந்த முக்கிய ஆவணங்களும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.